சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் கொடுத்துள்ளது. ஆனால் நிலங்களில் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் கால்வாய் வெட்டும் பணி 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் புதன்கிழமை காலை தொடங்கியது. இன்னும் 2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சேத்தியாதோப்பு, வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி!

காஞ்சிபுரத்தில் இரு பாடகா்கள் வெட்டிக் கொலை

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

