
பெண் காவலர்களுக்கு பாய்பரப் படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான பாய்மரப் படகு பயணத்தை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதில் ஒரு பகுதியாக சென்னை முதல் கோடியக்கரை வரை சுமார் 1,000 கி.மீ கடல்வழி தூரத்தை 25 மகளிர் காவலர்கள் அடங்கிய குழு பயணம் செய்தது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.