நன்னிலம்: பெண்ணுக்கு பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளித்ததைக் கண்டித்து ஸ்ரீவாஞ்சியம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பாதிக்கப்பட்டப் பெண் மற்றும் குழந்தையுடன் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
நன்னிலம் அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் உடையார்குளத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் முத்துலெட்சுமி (21). இவர் பிரசவத்திற்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மே மாதம் 29 ஆம் தேதி இப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் முத்துலெட்சுமி தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்களும், கணவரும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது மருத்துவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முத்துலெட்சுமி சிறுநீர் மற்றும் கழிவுப் பொருள்கள் இரண்டும் உடலின் ஒரே பகுதியிலிருந்து வெளியாவதாகக் கூறியுள்ளார்.
இதனால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாத பெண்ணின் பெற்றோர்கள், புதன்கிழமைப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். இந்நிலையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணுக்கு, பிரசவத்தின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாப்பிள்ளைக்குப்பம் குடவாசல் மாநில நெடுஞ்சாலையில் ஸ்ரீவாஞ்சியம் பேருந்து நிலையம் அருகே பாதிக்கப்பட்டப் பெண் மற்றும் குழந்தையுடன் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
சாலை மறியல் காரணமாக, ஸ்ரீவாஞ்சியத்தில் காலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்த நன்னிலம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படு என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு... சொந்த ஊரில் கால்பந்து போட்டியைக் கண்டுகளித்த மெஸ்ஸி!

மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ!
26 ஆண்டுகளாக... கார்கில் போர் தியாகியின் குடும்பத்திற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும்: சசி தரூர் மகன் கிண்டல்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



