முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஈரோடு கிழக்கு: 51,000 வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

News image
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Updated On :2 மார்ச் 2023, 11:46 am

DIN


ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில், 11வது சுற்று முடிவில், 83,628 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து பல சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். 

வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இதுவரை 11 சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
11 சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 82,995 வாக்குகள் பெற்று 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 31,962 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 4,062  வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், தேமுதிக வேட்பாளர் 605 வாக்குகள் பெற்று அடுத்த இடத்திலும் உள்ளனர். 

இன்னும் 42,971 வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருப்பது அவரது வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதாகவே உள்ளது.

முன்னதாக, 4 ஆவது சுற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். 

வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக சார்பாக அவர் மட்டுமே இருந்த நிலையில் தோல்வி விரக்தியில் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

போட்டியிட்ட 77 பேரில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களைத் தவிர 75 வேட்பாளர்கள் டெபாசிட் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.