ஒரே நேரத்தில் 5000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

தமிழகத்தில் சிற்பி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 5000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

சென்னை: தமிழகத்தில் சிற்பி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 5000 மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமல்லாமல், 5 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கியும் சாதனை படைத்துள்ளனர். 

சென்னையில் இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இயற்கையை பேணுவோம் என்ற தலைப்பின் கீழ், 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்த சிற்பி திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com