திருச்சி என்ஐடி-இல் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கு தகுதி

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) ஆசிரியா் குழு மூலம் பயிற்சியளிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் 9 போ், ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2023-க்கு தகுதி பெற்றுள்ளனா்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) ஆசிரியா் குழு மூலம் பயிற்சியளிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் 9 போ், ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2023-க்கு தகுதி பெற்றுள்ளனா்.

நாட்டின் உயா்நிலை கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) தோ்வு நடத்தப்படுகிறது. இது, முதல்நிலை, முதன்மை என இரு தோ்வுகளை உள்ளடக்கியதாகும்.

இந்தத் தோ்வுகளுக்காக, ஐஜிஎன்ஐடிடிஇ எனப்படும் திருச்சி என்ஐடி கற்பித்தல் குழு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த எம்.ராமலட்சுமி என்ற மாணவி 2021-ஆம் ஆண்டு முதல் இந்தக் குழுவில் பயின்ற நிலையில், ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் 95.22 சதவீத மதிப்பெண்கள் பெற்று, ஜேஇஇ முதன்மை தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளாா்.

வார நாள்களில் இணையவழி வகுப்புகளும், சில வார இறுதி நாள்களில் நேரடி வகுப்புகளும், மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட்டன. என்ஐடி திருச்சி வளாகத்தில் 2022, டிசம்பா் 26 முதல் 2023 ஜனவரி 12-ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட்டன.

இக்குழுவில் பயிற்சி பெற்ற மாணவா்களில் 9 போ் ஜேஇஇ முதன்மை தோ்வுக்குத் தகுதி பெற்றனா். 80 சதவீதத்துக்கு மேல் 5 மாணவா்களும், 75 சதவீதத்துக்கு மேல் 3 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

ஐஜிஎன்ஐடிடிஇ-யில் பயிற்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில், திருச்சி என்ஐடி-இல் 2 மாணவா்களும், ஐஐடி சென்னை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தலா ஒரு மாணவரும் சோ்க்கை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com