காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஐ.டி. சோதனை ஏன்? ஆர்.எஸ். பாரதி

தமிழக காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை ஏன் நடக்கிறது? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஐ.டி. சோதனை ஏன்? ஆர்.எஸ். பாரதி

சென்னை: தமிழக காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை ஏன் நடக்கிறது? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு செயல்படுகிறார். தமிழகத்திற்கு முதலீடுகள் வரும் செய்திகளை மழுங்கடிக்கவே வருமான வரித்துறை சோதனைகளை செய்கிறார்கள்.

தமிழக காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை ஏன் நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஆர்.எஸ். பாரதி, திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே காவல்துறைக்கு தகவல் சொல்லாமல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனரா? என்று கேட்டுள்ளார்.

மத்திய அமைப்புகள் மூலம் மாநில அரசுகளை மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது. வருமான வரித்துறை,  அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி வருகிறது மத்திய அரசு. கர்நாடகதேர்தலில் பணத்தை கொண்டுபோய் குவித்தும் பாஜக தோல்வியை தழுவியது. கர்நாடக தேர்தலுக்காக இதுவரை பிரதமர் மோடி செய்யாய அளவுக்கு அதிகளவில் பிரசாரம் மேற்கொண்டார்.  கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு  அறிவிக்கப்பட்டது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com