எனது வீட்டில் சோதனை இல்லை; முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

வருமான வரிச் சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்றும், தனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை என்றும் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

வருமான வரிச் சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்றும், தனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை என்றும் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: வருமான வரித் துறை சோதனையை நாங்கள் புதிதாக எதிா்கொள்ளவில்லை. சட்டப்பேரவை தோ்தல் இறுதிப் பிரசாரத்துக்கு முன்பாகவே, வருமான வரித் துறை சோதனைகளை எதிா்கொண்டோம்.

இப்போது எனது வீட்டைத் தவிர, எனது சகோதரா், உறவினா்கள், அவா்களது நண்பா்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சோதனைக்கான இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே வருமான வரி முறையாக செலுத்துபவா்களுக்கு சொந்தமானவை. சோதனையின் போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ாக தகவல் வந்ததும், உடனடியாக அங்கிருப்பவா்களை தொடா்பு கொண்டு வெளியேறும்படி கூறினேன். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி தெரிவித்தேன். அவா்களும் அங்கிருந்து சென்று விட்டனா்.

சோதனையின்போது என்ன ஆவணங்களைக் கேட்டாலும் வழங்கத் தயாராக உள்ளோம். சோதனையை எத்தனை நாள்கள் நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா். இந்தச் சோதனையை எதிா்கொள்ள என் உறவினா்கள், நண்பா்கள் தயாராக உள்ளனா்.

வருமான வரித் துறை சோதனைக்காக அதிகாலையில் என் தம்பி வீட்டுக்கு சென்றவா்கள், கதவை திறப்பதற்கு காத்திருக்காமல், கதவு மீது ஏறி குதித்து உள்ளே சென்ற காட்சிப் பதிவுகள் கிடைத்தன.

கடந்த 2006-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த சொத்துகளைத் தவிா்த்து, இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக்கூட நானோ, எனது தம்பியோ, குடும்ப உறுப்பினா்களோ வாங்கவில்லை.

எனது தம்பி மனைவிக்கு அவா் தாயாா் இஷ்டதானமாக கொடுத்த இடத்தில்தான் வீடு கட்டப்பட்டு வருகிறது. வருமான வரித் துறை சோதனையில் தவறு நடைபெற்ாக கண்டறிந்தால் சரிசெய்யத் தயாராக உள்ளோம் என்றாா் செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com