
சென்னை: நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருள்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1000 கோடி அளவில் தயாராகி வருகின்றன.
கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48 சதவிகிதம் என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த துறை விரிவடையும்.
இந்த துறை, ஊரகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தி வருவதாக டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.