ரூ.1,817 கோடியில் புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள்: டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆம் வழித்தடத்தில் ரூ.1,817.54 கோடி மதிப்பில் புதிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்க டாடா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆம் வழித்தடத்தில் ரூ.1,817.54 கோடி மதிப்பில் புதிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்க டாடா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆம் வழித்தடத்தில் கொளத்தூா் சந்திப்பு, சீனிவாச நகா், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை என ஐந்து சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கொளத்தூா் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை வரை இரட்டை சுரங்கங்கள், யு-பிரிவு பாதைகள் மற்றும் சாய்தள பாதைகள் உள்ளிட்ட பணிகளும் நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பந்தம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,817.54 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்புக்கடிதம் அக்.11-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், இயக்குநா் தி. அா்ச்சுனன் (திட்டங்கள்) ஆகியோரும், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் சாா்பில் நிா்வாக துணைத் தலைவா் ராமன் கபில் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனா்.

நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளா்கள் டி.லிவிங்ஸ்டன் எலியாசா், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளா் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்தம்-கொள்முதல்) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com