ஆசிரியர் தினம்: பாரதம் எனக் குறிப்பிட்டு ஆளுநர் வாழ்த்து!

மத்திய அரசு 'இந்தியா' என்ற பெயரை 'பாரதம்' என மாற்ற முயற்சிக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஆசிரியர் தினம்: பாரதம் எனக் குறிப்பிட்டு ஆளுநர் வாழ்த்து!

மத்திய அரசு 'இந்தியா' என்ற பெயரை 'பாரதம்' என மாற்ற முயற்சிக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கான குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது. 

இந்தியா என்ற பெயர் 'பாரத்' என மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை 'பாரதம்' (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தனது வாழ்த்துச் செய்தியில், 

தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டின் இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து, வலிமை மற்றும் திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம்' என குறிப்பிட்டுள்ளார். 

ஆளுநர் ஆர்.என். ரவியும் இந்தியாவை 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com