ஓபிஎஸ்-இபிஎஸ் கருத்து வேறுபாடுக்கு இதுதான் காரணம்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஓபிஎஸ்-இபிஎஸ் கருத்து வேறுபாடுக்கு இதுதான் காரணம்: முன்னாள் அமைச்சர்  ஓ.எஸ்.மணியன்

சி.ஏ.ஏ. மசோதாவுக்கு ஓ.பி.எஸ். மகன் தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்தால் தான் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாபுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், பா.ஜ.,வுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கூட்டணி இல்லை என்பதை தெரிவித்துவிட்டார்.

சி.ஏ.ஏ. மசோதாவுக்கு அ.தி.மு.க.,சார்பில் ஓட்டு அளித்தீர்கள் என எல்லோரும் பிரசாரத்திற்கு போகும் போது தி.மு.க., உள்ளிட்ட அவர்களின் ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்காக நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்றைக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓ.பி.எஸ். அவரது மகன் ரவீந்திரநாத் ஒருவர் எம்.பி.,யாக இருந்தார்.

அவர் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமியிடம் எந்த ஒப்புதலும் பெறாமல், ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இருந்ததால், அவரது மகன் ரவீந்திரநாத் தன்னிசையாக சி.ஏ.ஏ., மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். இது தான் உண்மையாக நடந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான், ஓ.பி.எஸ்., கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பழனிசாமியை பொதுச்செயலாளராக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை இல்லாமல், ஒற்றை தலைமையில் கம்பீரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com