140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்! -முதல்வர் ஸ்டாலின்

மோடி ஆட்சிக்கான முடிவுரையைத் தமிழ்நாட்டு மக்கள் எழுத தொடங்கும் நாள் ஏப்ரல் 19 என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பிரசாரமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இம்முறை ’இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்!

இந்தியாவின் வரலாற்றை - வருங்காலத்தைத் தமிழ்நாடுதான் தீர்க்கமாக எழுதப் போகிறது.

மோடி ஆட்சிக்கான முடிவுரையைத் தமிழ்நாட்டு மக்கள் எழுத தொடங்கும் நாள் ஏப்ரல் 19! தமிழ்நாட்டில் தொடங்கி, நாடெங்கும் இந்த உணர்வுத் தீ பரவட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com