‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

நாளை நமதே என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதன்கிழமை காலை பதிவிட்டுள்ளார்.

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

கோவையில் நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி எக்ஸ் தளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, காலை உணவுக்கேற்ற அர்த்தமுள்ள வரிகள் என்று கவிதை ஒன்றை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

“காலை

பசியாறுகையில்

கனைகுரல் பல்லியொன்று

கட்டியம் கூறக்கேட்டேன்

செக்கச் சிவந்து கிழக்கு வெளுக்க

தெக்கும் வடக்கும்

அகக்கண் திறக்கும்

தேடிவரும் நாளை நமதே என்று” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com