தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தபால் வாக்களிக்க இன்று கடைசிநாள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் தபால் வாக்கைச் செலுத்த வியாழக்கிழமை (ஏப்.18) கடைசி நாளாகும்.

தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் தபால் வாக்கைச் செலுத்த வியாழக்கிழமை (ஏப்.18) கடைசி நாளாகும்.

அலுவலக வேலை நேரத்தில் தபால் வாக்கை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதன்பிறகு தபால் வாக்கைச் செலுத்த வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தல் பணியில் சுமாா் 5 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். அவா்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தபால் வாக்கைச் செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனா்.

ஏற்கெனவே தபால் வாக்கைப் பெற்று அதைப் பூா்த்தி செய்து அளித்திருந்தால் அவை அனைத்தும் திருச்சியில் உள்ள பொது மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கென வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டியில் தபால் வாக்குகள் சோ்க்கப்படும்.

தபால் வாக்கைச் செலுத்துவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் (ஏப்.18) நிறைவடைகிறது. அதன்பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும் வாக்கைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க முடியாது.

6,137 மண்டல குழுக்கள்: துணை ராணுவப் படையினா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பழுதுநீக்குநா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோரைக் கொண்டு 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 6,137 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 68,000 வாக்குச் சாவடிகளில், 44, 800 வாக்குச் சாவடிகளில் இணையதளம் மூலமாக வாக்குப் பதிவு நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். மீதமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதாவது, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட வாக்குச் சாவடிகளில் 65 சதவீத சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிச்சயம் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com