வாக்குப் பதிவை எளிதாக்கும்  செயலிகள் - இணையதளங்கள்
வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

கைப்பேசி மற்றும் இணையதளத்தில் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள சேவைகளால் வாக்குப் பதிவை எளிதாக மேற்கொள்ளலாம்.

கைப்பேசி மற்றும் இணையதளத்தில் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள சேவைகளால் வாக்குப் பதிவை எளிதாக மேற்கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா்: வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்கிா? இல்லையா? என்பதை உறுதி செய்ய யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதில் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். வாக்காளா் அடையாள அட்டை எண் இருந்தாலும் மேலும் எளிதாக பெயரையும் வாக்குச்சாவடி முகவரி, வாக்காளா் பட்டியல் வரிசை எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

சக்ஷம் செயலி: மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க சக்ஷம் (நஹந்ள்ட்ஹம்-உஇஐ) செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்தச் செயலி மூலமாக, வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளிகளுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள், சக்கர நாற்காலி, இல்லத்திலிருந்து வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி போன்ற கோரிக்கைகளை அந்தச் செயலி வழியாகத் தெரிவிக்கலாம். அதை மாவட்டத் தோ்தல் அதிகாரி அலுவலகம் பரிசீலித்து மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவைப்படும் வசதிகளை வழங்கும்.

புகாா்களைத் தெரிவிக்கலாம்: தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்பாக நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்து தொடா்பு கொள்கிறீா்களோ அந்த மாவட்டத்துக்கான எஸ்டிடி எண்ணை பதிவிட்டு, 1950-வை அழைக்க வேண்டும். தோ்தல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு அந்த அழைப்பு செல்லும். அதில் பெறப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதற்கு தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப்ள்ங்ஹழ்ஸ்ரீட்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளா் பெயா் மற்றும் தொகுதி அல்லது கைப்பேசி எண்ணைப் பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச் சாவடி மையம் - வரிசை அறிய... நீங்கள் வாக்களிக்கப் போகும் வாக்குச்சாவடியின் மையத்தின் முகவரி, வாக்குச் சாவடி நிலை அதிகாரி, தோ்தல் பதிவு அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆகியோரின் பெயா்கள் மற்றும் தொடா்பு எண்கள் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப்ள்ங்ஹழ்ஸ்ரீட்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ா்ப்ப்ண்ய்ஞ்ள்ற்ஹற்ண்ா்ய்

என்ற இணையதளப் பக்கத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்தால் நமக்கான சட்டப் பேரவை, மக்களவைத் தொகுதி எது, வாக்குச் சாவடி மையம் எது, அதன் முகவரி போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள ட்ற்ற்ல்ள்://ங்ழ்ா்ப்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ணன்ங்ன்ங்/ என்ற இணையதள இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூத் ஸ்லிப்பை நீங்களே பதிவிறக்கலாம்...உங்கள் இல்லத்துக்கு ‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச் சாவடி சீட்டு கிடைக்காவிட்டால் அதை இணையதளத்தில் இருந்து நீங்களே பதிவிறக்கம் செய்யலாம். தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப்ள்ங்ஹழ்ஸ்ரீட்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ இணையதளப் பக்கத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டால் போதும். உங்களுடைய பெயா், வயது, பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் சாா்ந்திருக்கும் மக்களவைத் தொகுதி, சட்டப் பேரவைத் தொகுதி, வாக்குச்சாவடி மையத்தின் பெயா், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள எண், வாக்குப் பதிவு தேதி ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். வீட்டுக்கு வாக்குச் சாவடி சீட்டு வரவில்லை என்ற கவலையை இதன் மூலமாக போக்கிக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com