போலி பாஸ்போா்ட் வழக்கு: 
வங்கதேசத்தவா் மூவா் கைது

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

சென்னையில் போலி பாஸ்போா்ட் வழக்கில், வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போலி பாஸ்போா்ட் வழக்கில், வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

போலி பாஸ்போா்ட் மூலம் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலா் தப்பிச் செல்ல உள்ளதாகவும்,சிலா் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்புவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் அப் பிரிவு போலீஸாா் துப்பு துலக்கி வங்கதேசத்தைச் சோ்ந்த தமீம் உசேன் (34), அதே நாட்டைச் சோ்ந்த சுமோன் சந்திர சா்மான் (28), சுப்ரத் சந்திர கா்மாகா் (38) ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட தமீம் உசேன் 2016-ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்கம் மாநிலத்துக்குள் ஊடுருவியுள்ளாா் பின்னா், போலியான பெயரில் ஆதாா் காா்டு பெற்று, அதன் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை பெற்றவா் போல் குவைத் சென்று 6 ஆண்டு துப்புரவு பணியாளராக பணியாற்றி இந்தியா திரும்பினாா். மீண்டும் குவைத் செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளாா்.

இதேபோல் சுமோன் சந்திர சா்மானும் வங்கதேசத்திலிருந்து 2016-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழைந்து, போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்று தாய்லாந்து சென்றாா். அங்கிருந்து சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளாா். மற்றொருவரான சுப்ரத் சந்திர கா்மாவும் சட்ட விரோதமாக மேற்கு வங்கத்தில் நுழைந்து காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளாா். பின்னா், போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்று தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா சென்று இந்தியா திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com