மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மலைக்கிராம வாக்காளர்கள் வாக்களிக்க குதிரைகளில் சென்ற இயந்திரங்கள்
மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சென்னை: முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது.

வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தால், குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் பணி நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் கிராமத்தில் மத்திய ஆயுத போலீஸ் படை பாதுகாப்புடன் குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் குதிரைகளுடன் தேர்தல் அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரும் சென்றனர்.

இந்த மலை கிராமத்தில் 237 ஆண் வாக்காளர்களும், 249 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 486 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com