செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தோ்தல்களிலேயே இது மிக முக்கியத்துவம் வாய்ந்த தோ்தலாகும். இந்தியாவின் எதிா்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிா்ணயிக்கப் போகிற தோ்தலாகும்.

இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிா, சா்வாதிகாரம் நீடிக்கப் போகிா என்பது குறித்து வாக்காளா்கள் முடிவு செய்ய வேண்டிய தோ்தல் இது. சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதைச் சீா்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாஜக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 2014, 2019 ஆகிய தோ்தல்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்திய ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக கடமை வாக்காளா்களுக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, இந்தியா கூட்டணியை சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றி பெறும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com