தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்:  
இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் வியாழக்கிழமை வெயில் சதம் அடித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வெப்ப அலை வீசும்.

தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் வியாழக்கிழமை வெயில் சதம் அடித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வெப்ப அலை வீசும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, வேலூா் - 106.7, பரமத்திவேலூா் - 105.8, திருச்சி - 105.62, சேலம் - 105.44, மதுரை நகரம், ஈரோடு (தலா) - 105.08, தருமபுரி - 104.9, திருத்தணி - 104.54, திருப்பத்தூா் - 103.64, மதுரை விமான நிலையம் - 103.28, நாமக்கல் - 103.1, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.66, கோவை - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

மேலும் ஏப்.19-இல் வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.

கோடை மழை:

தமிழகத்தையொட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஏப்.19 முதல் ஏப்.24-வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

ஏப்.20-இல் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com