2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?
படம் | ஏஎன்ஐ

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக நடைபெற்றது. கடந்த முறை தமிழகத்தில் மொத்தம் 72.44 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் இன்று(ஏப். 19) மாலை 6 மணியுடன் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மாலை 7 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒரு சில பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால், வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதிகபட்சமாக இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 - 6 மணி வரை, வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பதிவான்ப வாக்கு சதவிகிதம் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை காட்டிலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com