இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு: இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி, மகன் சம்பத் ஆகியோருடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த தேர்தலின் முடிவுகள் ராகுல்காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும். இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தில்லியில் இந்த இந்திய கூட்டணி ஆட்சி வரும். யார் பிரதமராக வருவார்கள் என்பதை ஸ்டாலின், ராகுல்காந்தி போன்றவர்கள் முடிவு செய்வார்கள். அதில் எந்தவிதமான பிரச்னையும் வராது.

மக்கள் விரும்புகிற ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார். மோடி மீண்டும் வரக்கூடாது என்ற ஆவலில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு ஆகும் என கருதுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com