தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தனது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தனது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் சீனிவாசபுரம் வெங்கடேஸ்வரா பள்ளியிலும், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் முனிசிபல் காலனியிலும் வாக்களித்தார்.

தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் வடக்கு வீதி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியிலும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் என் செந்தில்குமார் காவலூர் தொடக்கப் பள்ளியிலும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மேல மருத்துவக்குடியில் உள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திலும் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

கும்பகோணம் அருகே சூரியனார் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரியனார் கோயில் ஆதீனம் 28ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாக்குப் பதிவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com