பண்ருட்டி வட்டம், எஸ்.ஏரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்.
பண்ருட்டி வட்டம், எஸ்.ஏரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்.

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ்.எரிப்பாளையம் கிராம பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.ஏரிப்பாளைம் கிராமத்தில் சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ளது. இதனால், அரசின் திட்டப்பணிகள் மற்றும் நல உதவிகள் கிடைப்பதில் எஸ்.எரிப்பாளையம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், எஸ்.ஏரிப்பாளையம் கிராம பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குச்சாவடி பணியாளர்கள் வாக்குப்பதிவிற்காக தயார் நிலையில் இருந்தும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com