அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  (கோப்புப்படம்)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (கோப்புப்படம்)

தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலருமான டிடிவி தினகரன் சென்னை அடையாறு வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச்செயலாளர் மாலை 4 மணியளவில் டிடிவி தினகரன் வாக்களித்தார்.

அதன்பின் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, தேர்தல் நடைமுறையில் திருப்தியில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், தேனி மக்களவை தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. 100 சதவிகிதம் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயகக் கடைமையை ஆற்றினால் தான் மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது நாட்டுக்கு நல்லது. சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளார்கள். அதை வாக்குப்பதிவு மூலமே நிரூபிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடி பிரதமராக வருவதற்கு இது நல்ல வாய்ப்பு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com