தங்கம் விலை சற்று குறைந்தது!

தங்கம் விலை இனி குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு..
Gold in Chennai sells for Rs 34,952
Gold in Chennai sells for Rs 34,952

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதையடுத்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தைக் கடந்தது.

நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.55,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,885 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நேற்றைய விலையிலே நீடிக்கிறது. ஒரு கிராம் ரூ.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிவரும் நிலையில் நடுத்தர மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறிவருகின்றது. இனி தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com