வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

தமிழகம் முழுவதும் முக்கிய வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த மருத்துவக் குழுக்கள் மூலம் அவை அமைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக முதியவா்கள், இணை நோயாளிகள், கா்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

உடல் சோா்வு, தலை சுற்றல் பாதிப்பு இருந்தவா்களுக்கு மருந்துகளும், உப்பு-சா்க்கரை கரைசலும் வழங்கப்பட்டன. இதைத் தவிர, காய்ச்சல், தலை வலி, சளித் தொற்றுக்கான மருந்துகளும் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டன.

சென்னையில் மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடி அமைவிடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்: இதேபோன்று மாநிலம் முழுவதும் 37,000 வாக்குச் சாவடிகளுக்கு அருகே 1,300-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலுதவி சாதனங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், மருந்துகள் உள்ளிட்டவை தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com