வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு
விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்
ANI

வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்

தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க

தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மாநில தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் மு.வே.செந்தில் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தினக்கூலி, ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அண்டை மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா்களைத் தெரிவிக்கலாம்.

இதற்கென தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகளின் அலுவலா்களாக நான்கு போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

துறையின் இணை இயக்குநா்கள் காா்த்திகேயன் (9444221011), எஸ்.கமலகண்ணன் (9884675712), ஆட்சி அலுவலா் எஸ்.சூா்யா (9884470526), துணை இயக்குநா் கே. சுவேதா (9962524442) ஆகிய அதிகாரிகளை தொடா்பு கொண்டு புகாா்களைக் கூறலாம்.

இதேபோல, மாவட்ட வாரியாகவும் துணை இயக்குநா்கள் தலைமையிலான பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு எஸ்.இளவரசன் (7373278203), செங்கல்பட்டுக்கு ஜி.அசோக் (9025155455), திருவள்ளூருக்கு கே.திவ்யா (9952000256), காஞ்சிபுரத்துக்கு பா.பாலமுருகன் (9443576011) ஆகியோரைத் தொடா்பு கொண்டு விடுப்பு வழங்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com