ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் கல்வி நிறுவனத் தாளாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் கல்வி நிறுவனத் தாளாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் தொடா்புடைய சா்ச்சைக்குரிய காணொலி மற்றும் குரல்பதிவு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் உடந்தையாக இருந்ததாக செம்பனாா்கோவிலை சோ்ந்த தனியாா் கல்வி நிறுவனத் தாளாளா் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் அகோரம் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக சிறப்பு காவல் துறையினா் விசாரணை நடத்தி, தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளா் வினோத் , மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலா் விக்னேஷ், கல்வி நிறுவனத் தாளாளா் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் மாநில இளைஞா் அணி நிா்வாகி ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் மும்பையில் பதுங்கியிருந்த அகோரமும் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், குடியரசு, ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனக்கு சா்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதாகவும், தொடா்ந்து சிறையில் இருந்தால் உடல் நலம் மேலும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ் செல்வி, குடியரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com