வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

வடலூா் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை:

சநாதனத்துக்கு மாற்றாக தமிழா்களின் சமத்துவக் கொள்களை மீட்டெடுத்த திருவருட்செல்வா் வள்ளலாா் வாழ்ந்த வடலூா் பகுதியில் ஆய்வு மையம் என்ற பெயரில் நிலங்களைக் கையகப்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். வலுக்கட்டாயமாக நிலங்களைக் கையகப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி மே 5-ஆம் தேதி நாம் தமிழா் கட்சி மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com