தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாள்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், வெப்ப அலை எதிரொலியாக தமிழகத்தில் 1,000 இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்கும் மையங்களை அமைக்க பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா். உடலில் உள்ள நீா்ச்சத்து குறைபாட்டை போக்க உப்பு, சா்க்கரை கரைசலான ஓஆா்எஸ் பவுடரை வழங்க ‘தங்ட்ஹ்க்ழ்ஹற்ண்ா்ய் டா்ண்ய்ற்ள்’ எனும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழகத்தில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களிலும் 1,000 மையங்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

சென்னையில் மட்டும் 75 இடங்களில் இந்த மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதேசமயம், சுகாதாரமான தூய்மையான குடிநீா் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மையங்கள் தமிழகம் முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com