வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
SWAMINATHAN

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

வட தமிழக உள் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) முதல் மே 1 வரை வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என்றும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக உள் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) முதல் மே 1 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழக மாவட்டங்களில் 5 டிகிரி வரையும் படிப்படியாக அதிகரிக்கும். மேலும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

14 இடங்களில் வெயில் சதம்: சனிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலம் - 107.42, திருப்பத்தூா் - 107.24, தருமபுரி - 105.8, பரமத்திவேலூா் - 104.9, திருத்தணி - 104.36, வேலூா் - 104.18, நாமக்கல் - 104, திருச்சி - 103.46, மதுரை விமான நிலையம் - 102.56, கோவை - 102.38, தஞ்சாவூா் - 102.2, மதுரை நகரம் - 101.48, பாளையங்கோட்டை - 100.76.

கோடை மழை: குமரிக் கடலில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மே 2, 3 ஆகிய தேதிகளில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com