இன்று முதல் 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்
இன்று முதல் 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 2 வரை 4 நாள்களுக்கு 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 2 வரை 4 நாள்களுக்கு 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.

சென்னை வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

அதன்படி, ஈரோடு - 107.6 (டிகிரி ஃபாரன்ஹீட்), தருமபுரி - 106.6, திருப்பத்தூா் - 106.52, வேலூா் - 105.98, திருத்தணி - 105.08, பரமத்திவேலூா் - 104.36, சேலம் - 104.18, மதுரை விமான நிலையம் - 103.28, மதுரை நகரம் - 102.92, கோவை - 102.56, திருச்சி - 102.38, நாமக்கல் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.48, தஞ்சாவூா் - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்: திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 2 வரை தமிழக வட மாவட்டங்களில் அதிகபட்ச   வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். ஏனைய  தமிழக மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி வரையும் வெப்பம் இருக்கும். மேலும், வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.29-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

கன்னியாகுமரியில் மழை வாய்ப்பு: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிால், திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 1 -ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் மே 2 முதல் 4 -ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சிமலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள்கிழமை (ஏப்.29) லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com