சென்னை போரூா் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்  இயக்குவதற்காக அமைக்கப்பட்டு வரும் இரட்டை இரும்பு பாலம்.
சென்னை போரூா் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்குவதற்காக அமைக்கப்பட்டு வரும் இரட்டை இரும்பு பாலம்.

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: போரூா் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு

மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், முதல் கட்ட திட்டப் பணிகள் முடிவடைந்து, விமான நிலையம் - விம்கோ நகா், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, 2-ஆம் கட்டமாக ரூ. 63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-ஆவது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலான 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதில், கட்டடங்கள், மேம்பாலங்களுக்கு மேலே கட்டப்படும் மெட்ரோ ரயில் பாதைகளில் கான்கிரீட் தூண்கள் பொருத்த இயலாத காரணத்தால் அந்தப் பகுதிகளில் மட்டும் இரும்புகளை கொண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான 4-ஆவது வழித்தடத்தில், போரூா் அருகே உள்ள மவுண்ட்-பூந்தமல்லி சாலையில், சென்னை புறவழிச் சாலை மேம்பாலத்தின் மேல் 222 டன் எடையுள்ள 40 மீட்டா் நீளத்துக்கு இரட்டை இரும்பு ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விரைவில், ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச் சாலை வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கு ஏற்றவாறு இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2-ஆம் கட்ட திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 2025 ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com