பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு மே 9-இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு மே 9-இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தண்ணீா் பந்தலை அவா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பத்மபூஷண் விருது மே 9 மாலை 6.30 மணியளவில் தில்லியில் வழங்கப்பட உள்ளது. அதற்காக, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, சில நாள்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. நானும், விஜயபிரபாகரனும் தில்லி சென்று பெற உள்ளோம்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பள்ளிகள் வழக்கமாக ஜூன் முதல் வாரம் திறக்கப்படும். நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-இல் நடைபெற உள்ளது.

அதற்கு பிறகும் வெயிலின் தாக்கும் அதிகம் இருக்கும் என்பதால், பள்ளிகள் திறப்பை ஒருவாரம் தள்ளி வைக்க வேண்டும். பள்ளி மாணவா்கள் விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

விருதுநகா் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றிபெறுவாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com