தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 53,920-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 53,920-க்கு விற்பனையானது.

பல்வேறு காரணிகளால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,740-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் கிராம் ரூ. 87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.87,500-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com