வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

வட  தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை (மே1-3) வரை 3 நாள்கள் வெப்ப அலை வீசக்கூடும்; அதே வேளையில், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் சனிக்கிழமை (மே 1-4) வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

அதேசமயம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை(மே1-3) வரை 3 நாள்கள் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியûஸயொட்டியே இருக்கக்கூடும்.

மழைக்கான வாய்ப்பு: தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன்

காரணமாக புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): தக்கலை (கன்னியாகுமரி) 50, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 30, குழித்துறை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 20,

தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு(பாரன்ஹீட்): பரமத்தி வேலூர்- 108.5, ஈரோடு-107.96,திருப்பத்தூர்-107.24,வேலூர்-106.88, திருச்சி-106.34,சேலம்-105.44, மதுரை விமான நிலையம் 105.08, தருமபுரி, திருத்தணி-104.36, மதுரை நகரம் 104.36, நாமக்கல், தஞ்சாவூர்-104,கோவை-103.64, சென்னைமீனம்பாக்கம்-102.92, பாளையங்கோட்டை-100.76.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com