காஞ்சிபுரம் ஸ்ரீஅஷ்ட புஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் ஸ்ரீஅஷ்ட புஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

பக்தி பரவசம் பெருகும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷண விழா

கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 75 வது திருக்கோயிலாகவும், இக்கோயில் மூலவர் 8 திருக்கரங்களை உடையவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில். இக்கோயில் கடந்த 9.12.2021 ஆம் ஆண்டு மகா சம்ப்ரோஷணம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாசம்ப்ரோஷணம் தொடர்பான யாகசாலை பூஜைகள் இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அன்னதானம், மாலையில் பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியனவும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ் கே பி. எஸ் சந்தோஷ் குமார் தலைமையிலான அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி பா.உ. செம்மல், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.க. சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் ,சமூக சேவகர் நடராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com