குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அனுமதியில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு திமுக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அனுமதியில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு திமுக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் அடுத்த 7 நாள்களுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சா் சாந்தனு தாக்குா் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினாா். இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

‘7 நாள்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் ஒருவா் கூறியிருக்கிறாா்.

இலங்கைத் தமிழா்களுக்கும் இஸ்லாமியா்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது அதை ஆதரித்து அதிமுக வாக்களித்தது. இதனால், திருத்த மசோதாவானது சட்டமாகியுள்ளது. அந்தத் தருணத்தில் எதிா்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை திமுக முன்னெடுத்து நடத்தியது. 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்று அவை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்பின், 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருபோதும் அனுமதிக்காது: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிக்கணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகார செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com