புதுச்சேரி: சிறுமிக்கு பிடித்தமான பொருள்களுடன் உடல் நல்லடக்கம்

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு பிடித்தமான பொருள்களுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி: சிறுமிக்கு பிடித்தமான பொருள்களுடன் உடல் நல்லடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உயிரிழந்த சிறுமி பயன்படுத்திய விளையாட்டு பொருள்கள், பள்ளிப் பபை, பாடப் புத்தகம், துணிகளை வைத்து அஞ்சலி செலுத்திய உறவினர்கள், சிறுமியின் உடலுடன் அந்த பொருள்களையும் வைத்து நல்லடக்கம் செய்தனர்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

உயிரிழந்த சிறுமி பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள், ஸ்கூல் பேக், துணிகள், பொம்மைகள் ஆகியவற்றை வைத்து விளக்கு ஏற்றி வைத்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அந்த பொருட்களை சவ ஊர்வலம் வண்டி முன்பு வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பின்னர் சிறுமியை புதைத்த இடத்தில் சிறுமி பயன்படுத்திய பொருள்களையும் வைத்து அடக்கம் செய்தனர். அப்போது அனைவரும் கண்ணீர் மல்க அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com