10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை( மார்ச் – 26 ) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

அதில், தனித் தேர்வர்கள் 28,000 பேரும், 235 சிறைக் கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com