‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி - சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Updated On :

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, இன்றிரவு போட்டி முடிந்ததும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசன் சென்னையில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (மார்ச் .26) சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 11.20 மற்றும் 11.45 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில்,10.40 மற்றும் 11.05 மணிக்கு வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு ரயில் புறப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.