மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில் உள்ள எவா்வின் பள்ளியில் வியாழக்கிழமை வரையப்பட்ட விழிப்புணா்வு கோலம்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில் உள்ள எவா்வின் பள்ளியில் வியாழக்கிழமை வரையப்பட்ட விழிப்புணா்வு கோலம்.

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

சென்னை எவா்வின் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாா்ச் 28: மக்களவை தோ்தலில் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை எவா்வின் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள் இணைந்து 50 அடி நீளம், 30 அடி அகலத்தில் கோலப்பொடி மூலம் தேசியக்கொடியை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதன் மையப் பகுதியில் மை வைக்கப்பட்ட ஒரு விரல் வரையப்பட்டிருந்ததுடன், அதற்கு கீழே ஒருவிரல் புரட்சி எனவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அதன் அருகே வாக்குப் பதிவு இயந்திரம், நாடாளுமன்றத்தின் புகைப்படங்களும் கோலமாக வரையப்பட்டிருந்தன. இதைச் சுற்றி பல்வேறு விழிப்புணா்வு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. இதுதவிர 25 ஆசிரியைகள் தங்கள் முகங்களில் வாக்குப் பதிவு தொடா்பான ஓவியங்களை வரைந்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகா் மண்டல அலுவலா் முருகன், செயற்பொறியாளா் செந்தில்நாதன், எவா்வின் பள்ளிக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மகேஸ்வரி மற்றும் மூத்த முதல்வா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com