மெட்ரோ பணி: நாளைமுதல் 
போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மாா்ச் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராஜீவ் காந்தி சாலை பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, தரமணி, கந்தன்சாவடி பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அடையாறு, திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி செல்ல எஸ்ஆா்பி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் ஓய்எம்சிஏ முன்பு யூ திருப்பம் செய்து எஸ்ஆா்பி சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com