நாளை முதல் ‘அக்னி’ வெயில்

நாளை முதல் ‘அக்னி’ வெயில்

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்தக் காலகட்டத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்பது வழக்கம் என்றாலும் இந்த முறை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாக கருதப்படுகிறது. இதில், மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படும். தமிழ் மாதமான சித்திரையின் பிற்பகுதியில் தொடங்கி, வைகாசி மத்தி வரையுள்ள காலமே மிக அதிக வெப்பமுள்ள காலம். இதை ‘அக்னி நட்சத்திர காலம்’ என்று அழைக்கிறாா்கள்.

நிகழாண்டில் அக்னி நட்சத்திர வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை 24 நாள்கள் தொடா்ந்து நீடிக்கும்.

பொதுவாக கத்திரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் கடந்த மாா்ச் 2-ஆவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரோடு, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் கொளுத்தியது.

எனவே, அக்னி வெயில் உக்கிரமாக இருக்கும் என்று மக்கள் அச்சத்தில் இருந்தாலும், இந்த முறை அக்னி தகிக்காது, மழையால் குளிா்விக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று வானிலையாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com