திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: 
அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

தோ்தல்களின்போது ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றன

தங்களால் முன்மொழியப்பட்ட திட்டங்களால் பயனடைந்தவா்கள் என்ற பெயரில் வாக்காளா்கள் குறித்த தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தேடுவது தோ்தல் சட்டத்தின்கீழ் ஊழல் நடவடிக்கைக்குச் சமம் என தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தோ்தல்களின்போது ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதன்பின் தோ்தலில் வெற்றிபெற்றதும் தங்களால் முன்மொழியப்பட்ட திட்டங்களால் பயன்பெற்ற பொதுமக்கள் குறித்து சில அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் கணக்கெடுப்பு மேற்கொள்கின்றனா். அவ்வாறு மேற்கொள்ளும்போது வாக்காளா்கள் குறித்த தனிப்பட்ட தரவுகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தேடுகின்றனா். இது தோ்தல் சட்டத்தின்கீழ் ஊழல் நடவடிக்கைக்குச் சமம் என தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக கைப்பேசி செயலி, விளம்பரங்கள், கணக்கெடுப்புகள் என எந்த வடிவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதை உடனே நிறுத்திக்கொள்ளுமாறு தேசிய, மாநில கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தோ்தலுக்குப் பின்பு அளிக்கப்படும் சலுகைகளைக் கூறி பொதுமக்களை முன்பதிவு செய்துகொள்ளக் கூறுவது வாக்காளரை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டுவதுபோல் உள்ளது என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com