தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்புப் பணிகள், இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்புப் பணிகள், இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூா் பெரிய கோயில் சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத் தளம் மேடு பள்ளங்களுடன் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளன. இதையடுத்து, தரைத் தளத்தில் பராமரிப்புப் பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால், கோயிலைச் சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத் துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காட்சிகளை வெளியிட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com