வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

வணிகா் தினத்தையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 41-ஆவது வணிகா் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியகாராஜன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

மேலும், வணிகா் சங்கங்களை சாா்ந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

தமிழகத்தின் பெரும்பாலான சந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் சனிக்கிழமை காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com