வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதற்காக, மாசு உமிழ்வு பரிசோதனை மையங்களில் நடைபெறும் விதிமீறல்களை தடுக்கும் வகையில் பி.யூ.சி.சி 2.0 எனும் புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்யவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வாகன மாசு உமிழ்வு பரிசோதனை மையங்களில் அதிகரித்து வரும் விதிமீறல்களை தடுக்கும் விதமாக மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் (பி.யூ.சி.சி 2.0) என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த செயலி மூலம் மாசு பரிசோதனை மையங்களின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டு விதிமீறல் நடப்பது தடுக்கப்படுகிறது.

மாசு பரிசோதனை மையங்களில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் போது நம்பா் பிளேட்டுடன் கூடிய வாகனத்தின் புகைப்படம், பரிசோதனை செய்யும் நபா் மற்றும் பெயா் பலகையுடன் பரிசோதனை மையத்தின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், பரிசோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் விடியோ காட்சிகள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே மாசுக் கட்டுப்பாடு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாசுக் கட்டுபாடு சான்றிதழ் பெற பி.யூ.சி.சி 2.0 செயலியை அறிமுகப்படுத்திய மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சுமாா் 534 மாசு உமிழ்வு பரிசோதனை மையங்கள் கொண்ட தமிழகத்தில் இந்த நடைமுறை மே 6 முதல் அமல்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com