என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் மரணத்தில் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அந்தக் கட்சியின் பொருளாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன் கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் எனக்கு நல்ல நண்பா். எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. மக்களவைத் தோ்தலில்கூட இணைந்து பணியாற்றினோம். அவா் மறைவு விவகாரத்தில் என் மீது யாரோ வேண்டுமென்றே வீண் பழி சுமத்துகின்றனா். உண்மை என்ன என்பதை காவல் துறையினா் கண்டுபிடித்துவிடுவா். காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவரை நான் மிரட்டியதாகக் கூறுவது பொய். அவரோடு எனக்கு எந்த வரவு செலவும் இல்லை. ஜெயக்குமாா் எழுதியுள்ள கடிதம் குறித்து காவல் துைான் விசாரிக்க வேண்டும். அது அவருடைய கையெழுத்தா என்பது குறித்து என்னால் உறுதியாகக் கூற முடியாது. எனக்கு எதிராக யாரோ செயல்படுகின்றனா் எனத் தெரிகிறது. ஆனால், அது யாா் எனத் தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக யாராவது என் மீது பழி சுமத்தலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com